திரைப்படங்களி நடித்து பிரபலமான நடிகர் ஷாநவாஸ் பிரதான் வெள்ளிக்கிழமை காலமானார்.
தொலைக்காட்சி சீரியல், திரைப்படங்கள் மற்றும் OTT ஆகியவற்றில் பணியாற்றிய நடிகர் ஷாநவாஸ் பிரதான் காலமானார். அவருக்கு வயது 56. நடிகர் மிர்சாபூர், 24, பியோம்கேஷ் பக்ஷி, டோட்டா வெட்ஸ் மைனா போன்ற நிகழ்ச்சிகளிலும், ஷாருக்கானின் ரயீஸ் மற்றும் சைஃப் அலி கானின் பாண்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் யஷ்பால் ஷர்மா,. ஷாநவாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஷாநவாஸ் மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மயங்கி விழுந்ததையடுத்து, கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் பகிர்ந்து கொண்டார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சிகள் அவருக்கு விருது வழங்கப்பட்டது. ஆனால் விருதைப் பெற்ற சிறிது நேரத்திலேயே நடிகர் ஷாநவாஸ் மயங்கி விழுந்தார். … முழு நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது மற்றும் மக்கள் மற்றும் மருத்துவர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.