விடுபட்ட விவரங்களை 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்…! பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு…!

money School students 2025

அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் 13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம், 60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண், 45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவில் வெங்காயம் முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒரே இடம் இதுதான்!. வளர்க்கவே கூடாதாம்!. ஏன் தெரியுமா?.

Sun Sep 7 , 2025
இந்தியாவில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன,. இது நாட்டின் கலாசார நான்முகத் தன்மையை, புவியியல் மற்றும் காலநிலை சூழலை, மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவத்திற்கேற்ப உணவுப் பொருட்கள் கிடைப்பதை பிரதிபலிக்கின்றன. சிலர் சைவமாக இருக்கின்றனர்; சிலர் அசைவ உணவுகளை உண்பவர்கள். சிலர் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை கூட உண்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையலறைகளிலும் வெங்காயம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், பருப்புகள், காய்கறிகள், சாலட்கள், […]
onions

You May Like