‘Satellite’ மூலம் மொபைல் தொடர்பு!! -சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மொபைல் தகவல் தொடர்பு அமைப்பில், செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

சீனாவால் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட ‘Tiantong -1’ வரிசை செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது. இது ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள் இணைப்புக்கு வழி வகுத்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது,

செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் துறையில் அடுத்தகட்ட நகர்வாகும். இது படிப்படியாக, பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு குய் வான்ஜாவோ தெரிவித்தார்.

பேரிடர் காலங்களில்  செல்போன் கோபுரங்கள்பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால் மீட்பு பணியில் சிரமம் ஏற்படுகிறது. நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது ‘செயற்கைக்கோள் இணைப்பு’ முக்கிய பங்கு வகிக்கிறது. செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களின்போதும் அழைப்பை மேற்கொள்ளமுடியும். இதற்கான தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கியுள்ளது.

செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை கொண்டு வரும் உலகின் முதல் நிறுவனமாக Huawei ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, Xiaomi, Honor மற்றும் Oppo ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இத்தகைய வசதியைக் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

Next Post

ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை…!

Mon Apr 15 , 2024
கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. உலக புகழ்பெற்ற தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். அனைத்து மாதங்களும் திருவிழா நடந்தாலும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலம். இந்த வருடம் மதுரை சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் […]

You May Like