மிகத் தீவிர புயலாக வலுவடைந்த மோக்கா புயல்….! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று காலை 5.30மணி அளவில் மிக தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு வட மேற்கு திசையில் நிலை கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இது வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுவடைந்து, வரும் 14ஆம் தேதி நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோமீட்டர் வேகத்திலும், இடையே 175 கிலோ மீட்டர் வேகத்திலும் கடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


ஆகவே இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

வரும் 13ஆம் தேதி அதாவது நாளை முதல் 16ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்பதை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஆவிகளிடம் பேச வைப்பதாக ஆசைக்காட்டி ரூ.2 கோடி வரை மோசடி..!! மிரண்டுபோன போலீஸ்..!! மந்திரவாதி சிக்கியது எப்படி..?

Fri May 12 , 2023
சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). இவர், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். தன்னை கேரளாவைச் சேர்ந்த மந்திராவதி ஒருவர் ஆவிகளிடம் பேச வைப்பதாக ரூ.2 கோடி மோசடி செய்தததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “நைஜீரியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் நான் பணியாற்றிய போது, கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் என்னுடன் வேலை பார்த்தார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக […]
WhatsApp Image 2023 05 12 at 3.35.02 PM

You May Like