’மக்களின் ஆசையை தூண்டி ஆட்சிக்கு வந்த மோடி’..!! ’புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி’..!! போட்டுத் தாக்கிய முதல்வர்..!!

மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30%இல் இருந்து 22%ஆக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read More : Earth | பூமிக்கு அடியில் இப்படி ஒரு அதிசயமா..? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சீக்ரெட் கடல்..!!

Chella

Next Post

BJP-யின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்ட காயத்ரி..!! சர்வே முடிவு எங்கயோ போகுதே..!!

Thu Apr 4 , 2024
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சர்வே நடத்தியுள்ளார். தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதில் மண்ணை அள்ளி போடுவது போல் அதிமுக நிர்வாகி காயத்ரி […]

You May Like