தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் மருத்துவத் துறையில் காலியாக உள்ள ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி (Assistant Medical Officer – Ayurveda) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகளின் கீழ் இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
உதவி மருத்துவ அதிகாரி (ஆயுர்வேதம்) 8
வயது வரம்பு: அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேதத்தில் HPIM அல்லது GCIM அலல்து L.I.M அல்லது B.A.M.S ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
* இந்திய மருத்துவத்திற்கான இந்திய வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: ஆயுர்வேத மருத்துவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் எதுவும் நடத்தப்படாது.
* எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு விவரங்கள்
தமிழ் மொழித் தாள்
- 10-ஆம் வகுப்பு தரத்தில் நடைபெறும்.
- 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம்.
- 40% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.
ஆயுர்வேதத்தை முதன்மையாக கொண்ட தாள்
- 100 மதிப்பெண்களுக்கு, 2 மணி நேரம்.
- தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 30% போதுமானது.
- தாள் ஆங்கிலத்தில் மட்டுமே அமையும்.
- நெகட்டிவ் மார்க் இல்லை.
தேர்வு சென்னையில் கணினி வழி நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். தகுதி பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியிடங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் டிஏபி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்.