நாமக்கல் மாவட்டம் Excel பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை. கல்லூரியில் உணவு சமைக்கவும், கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் Excel பொறியியல் கல்லூரி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிலர், இக்கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கிப் பயில்கின்றனர். இந்நிலையில், நேற்று, கல்லூரி விடுதியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொடர் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமை ஏற்பட்ட காரணத்தால்தான் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்குண்டான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



