TNPSC முக்கிய அறிவிப்பு…! குரூப்-2 & 2A விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்…!

குரூப்-2 & 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்‌-2 & 2& முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகளின்படி முதன்மைத்‌ தேர்வுக்கு அணுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அசல்‌ சான்றிதழ்களை 17.11.2022 முதல்‌ 16.12.2022 வரை இ-சேவை மையங்கள்‌ வாயிலாக பதிவேற்றம்‌ செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவன இ-சேவை மையங்களும்‌ காலை 8மணி முதல்‌ இரவு 8 மணி வரை செயல்படும்‌ வகையில்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும்‌ தேவைப்படும்‌ இ-சேவை மையங்களில்‌ கூடுதல்‌ பணியாளர்களும்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. எனவே, விண்ணப்பதாரர்கள்‌ இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள்‌ டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 1800 425 2911 -ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

20221203 073738

Vignesh

Next Post

ரயில்வே தேர்வுகள் அதிரடி மாற்றம்..!! இனி யுபிஎஸ்சி நடத்தும்..!! இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

Sat Dec 3 , 2022
இனி ரயில்வே தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தும் என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) தேர்வானது அடுத்தாண்டு (2023) முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. ஐஆர்எம்எஸ் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. ப்ரிலிமினரி ஸ்கிரீனிங் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும். இரண்டாம் […]
Train

You May Like