எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…..! நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்…..!

பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக, நடைபெறுகிறது. பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படி மிகக் கடுமையான தண்டனை.

அதன் காரணமாக தானோ என்னவோ தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி காலத்திலும் சரி, இதற்கு முன்பு நடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறைந்தபாடில்லை.

ஆனால் அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது தற்போதைய திமுக ஆட்சியில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது.அந்த வகையில், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மருத்துவர்கள் பேராசிரியர்கள் என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அது தொடர்பாக வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து அரசாணை வெளியிட்ட போது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் வழங்கிய சகோதரர்களின் பெயர்களும் வெளியாகி இருந்தது .ஆகவே பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் வழங்க தயக்கம் காட்டினர் இந்த நிலையில் பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலமனுவை தாக்கல் செய்தார்.

அதாவது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்ட அப்போதைய காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை வெளியிட வைத்தது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், அப்போதைய தலைமைச் செயலாளரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து சென்ற வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் முகவரி துறையிடம் மனு வழங்கியதாக குறிப்பிட்டு இருக்கின்ற பாலச்சந்தர், ஆனால் இந்த புகார் மனுவும் மீது எந்தவிதமான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். ஆகவே சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். அதோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துரை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.ஆகவே இந்த வழக்கு விவரம் பற்றி தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்த பாலச்சந்திரனுக்கு 50000 அபராதம் மிதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

அடுத்தடுத்த அதிர்ச்சி.. சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை.. மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி..

Tue Feb 14 , 2023
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களே தற்கொலை செய்து கொள்வதை பார்க்க முடிகிறது.. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் சென்னை ஐஐடியில், முதுநிலை ஆராய்ச்சி படிப்பில் 2-ம் ஆண்டு படித்து […]

You May Like