திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை..!! – அண்ணாமலை

Annamalai K BJP

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


திருப்பரங்குன்றம் மலையில் தீப தூணில் தீபம் ஏற்றும் வழக்கு சர்ச்சையான நிலையில் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திருப்பரங்குன்றம் மலையின் 3 இடங்களை தவிர, மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் எனக் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு மற்றும் படிக்கட்டு மசூதிக்கு சொந்தமானது. ஆனால், மற்ற அனைத்து இடங்களும் இந்துக்களுக்கு சொந்தமானது. அதேபோல, கடந்த 2014ம் ஆண்டு வந்த தீர்ப்புக்கும், தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உண்மையை திரித்து கூறியிருக்கிறார்.

கடந்த 1996ம் ஆண்டு வந்த தீர்ப்பில் கூட, தர்காவில் இருந்து 15 மீ தள்ளி தீபம் ஏற்றலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. திருப்பறங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு சிக்கந்தர் என பெயர் சூட்டுகிறார்கள்.

சிக்கந்தர் என பெயர் சூட்டிய போது அற நிலையத்துறை நீதிமன்றம் செல்லவில்லை.. மலையில் ஆடு கோழிகளை பலியிட தடை கோரி அற நிலையத்துறை நீதிமன்றம் செல்லவில்லை. இப்போது மட்டும் களவரத்தை உண்டு செய்ய பிரச்சனை செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Read more: இரண்டு வாரம் வெந்தய நீரைக் குடித்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வரவே வராதாம்..!

English Summary

Muslims did not protest lighting the lamp on the top of Thiruparangkundram hill..!! – Annamalai

Next Post

மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் உயிரிழப்பு.. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி!

Fri Dec 5 , 2025
பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயில் முன் குதித்து ஒருவர் உயிரிழந்தார், இதனால் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. கெங்கரி நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடனத்து.. இதுகுறித்து தகவலறிந்த உடனேயே, கெங்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரை அடையாளம் காணத் தொடங்கினர். அவர் ஏன் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மைசூரு சாலைக்கும் சல்லகட்டாவுக்கும் இடையிலான சேவைகள் […]
banglore metro

You May Like