தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்து வருகிறார்.. தவெக சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இவர் விஜய்யை விட ஆக்ரோஷமாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனாவின் வழக்கறிஞர் தரப்பில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “ ஒரே நாளில் 3 முறை ஒரே ஆட்டோவில் 5 பேர் மீண்டும் மீண்டும் அலுவலகம் அருகே அச்சுறுத்தும் வகையில் வந்தனர். சென்னை ஆழ்வேர்பேட்டையில் உள்ள என் அலுவலகம் அருகே ஆட்டோ, காரில் ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டனர். கடந்த 10-ம் தேதி காலை 10 முதல் 11 மணி மணி வரை ஆட்டோ, காரில் 5 பேர் வந்து எங்கள் அலுவலகம் அருகில் நோட்டமிட்டனர். அவர்களிடம் விசாரித்த போது விவரங்களை தெரிவிக்க மறுத்து சிறிது நேரத்தில் வெளியேறிவிட்டனர்..
பின்னர் அதே நாளில் மதியம் 1.00 மணி அளவில் அவர்கள் திரும்பி திரும்பி வந்து நோட்டமிட்டனர். அதே நாளில் இரவு நேரத்தில் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நோட்டமிட்டனர். திமுக கொடி உடன் கூடிய கார் என் அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான இதை எல்லாம் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களையும் காவல்துறையிடம் ஆதவ் அர்ஜுனா தரப்பு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே ஆதவ் அர்ஜூனாவுக்கு தனியார் பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.
Read More : தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்? இளைஞர்களின் பெரும் ஆதரவை பெற்ற விஜய்? Grok சொன்ன ஆச்சர்ய பதில்..