234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. காரைக்குடியில் களமிறங்கும் சீமான்..!

seeman ntk

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..


இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..

இந்த நிலையில் திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார்.. வேட்பாளர்களில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் போட்டியிடுகிறார்.. மேட்டூரில் வீரப்பன் மகள் வித்யாராணி போடியிடுகிறார்.. எடப்பாடி பிரியதர்ஷினி போட்டியிடுகிறார்.. கும்மிடிப்பூண்டி – வழக்கறிஞர் தர், பொன்னேரி – பொறியாளர் ராஜாத்தி திருத்தணி – முனைவர் சந்திரன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே. நகர் – வெண்ணிலா தாயுமானவன், பெரம்பூர் – வெற்றித்தமிழன், கொளத்தூர் – வழக்கறிஞர் சவுந்திர பாண்டியன் லூடர் சேத் போட்டியிடுகின்றனர். ஆயிரம் விளக்கு – இயக்குனர் மு.களஞ்சியம், மதுரவாயல் – ரேவதி, அம்பத்தூர் – சிலம்பரசன், மாதவரம் – கிருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர் – சத்யா பாஸ்கர், அண்ணாநகர் – வழக்கறிஞர் சங்கர், விருகம்பாக்கம் – சந்தோஷ், சைதாப்பேட்டை – வித்யா, தி நகர் – அனுஷா விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அணைக்கட்டு – ரவிகுமார், கீழ் வைத்தியானங்குப்பம் – கலையேந்திரி, குடியாதம் – இமலன் ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17% வாக்குகளை பெற்று தந்ததால் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : நாமக்கல்லில் ரகசிய மீட்டிங்..!! அதிமுகவிடம் பிடியை இறுக்கும் பாஜக..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

RUPA

Next Post

கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.11,000 வழங்கும் மத்திய அரசு..! அசத்தல் திட்டம்..! எப்படி விண்னப்பிப்பது..?

Sun Feb 22 , 2026
மத்திய அரசு நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்குகிறது. ஆனால், அவர்கள் பெறும் சலுகைகள் குறித்து பலருக்குத் தெரியாது. மத்திய அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களில் சில மட்டுமே மக்களைச் சென்றடைந்துள்ளன. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது மக்களிடையே பிரபலமில்லாத திட்டங்களில் ஒன்றாகும். இது நாட்டில் கர்ப்பிணிப் […]
pregnant 1

You May Like