இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஜி.பி. ஹிந்துஜா (GP Hinduja) இன்று காலமானார்.. அவருக்கு வயது 85. வணிக உலகில் ‘ஜி.பி.’ (GP) என அன்பாக அழைக்கப்பட்ட ஜி.பி. ஹிந்து ஜா, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டோரி பியர் ராமி ரேஞ்சர் (Rami Ranger) இன்று தகவலை உறுதி செய்தார்..
பிரிட்டிஷ் லார்ட்ஸ் அவையின் உறுப்பினரான ரேஞ்சர், ஒரு உணர்வுப்பூர்வமான இரங்கல் அறிக்கையை வெளியிட்டார். ஹிந்துஜா அவர்கள் “மிகவும் கருணையுள்ள, தாழ்மையான, உண்மையான நண்பர்” என குறிப்பிடும் அவர், “இது ஒரு யுகத்தின் முடிவாகும்” என்று அவர் தெரிவித்தார்..
அவர் தனது அறிக்கையில் “ அன்பு நண்பர்களே, மிகவும் கனமான இதயத்துடன், நம் அன்பிற்கினிய நண்பர் திரு. ஜி.பி. ஹிந்து ஜா அவர்கள் மறைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறேன். அவர் மிகவும் கருணையுள்ள, தாழ்மையான மற்றும் உண்மையான நண்பராக இருந்தார். அவரின் மறைவு ஒரு யுகத்தின் முடிவை குறிக்கிறது, ஏனெனில் அவர் சமூகத்திற்கும் நம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி சக்தியாக இருந்தார்..” குறிப்பிட்டுள்ளார்..
மேலும் “நான் பல ஆண்டுகளாக அவரை அறிந்திருந்தேன்; அவரது குணாதிசயங்கள் தனித்துவமானவை — அருமையான நகைச்சுவை உணர்வு, சமூகத்திற்கும் நாட்டிற்கும் (இந்தியா) அர்ப்பணிப்பு, மேலும் எப்போதும் நல்ல காரணங்களை ஆதரித்தவர். அவர் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டார்; அதைப் பூர்த்தி செய்வது கடினம். அவர் சொர்க்கத்தில் சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.” என்றும் தெரிவித்துள்ளார். அதே போல் அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
கோபிசந்த் ஹிந்துஜாவிற்கு சுனிதா என்ற மனைவியும், சஞ்சய் (Sanjay) மற்றும் தீரஜ் (Dheeraj) என்ற மகன்களும், ரீதா (Rita) என்ற மகளும் உள்ளனர். புகழ்பெற்ற இந்த ஹிந்துஜா குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஜி.பி. ஹிந்து ஜா, தனது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் ஹிந்து ஜா (Srichand Hinduja) அவர்கள் மறைந்ததைத் தொடர்ந்து, 2023 மே மாதத்தில் இந்த உலகளாவிய தொழில்துறை குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : இந்தியாவில் ChatGPT Go இலவசம்: அதை எப்படிப் பெறுவது? தகுதி & விதிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ..



