ஆந்திர மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். பின்னர், அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில், திடீரென அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 8 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.