fbpx

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி..!! ஓரங்கட்டிய கார் ஓட்டுநர்..!! மயங்க வைத்து பலாத்காரம்..! தூக்கி வீசிய கொடூரம்..!!

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவி ஒருவர் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) அன்று மாலை கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் மாணவியை ஏற்றிச் செல்வதற்காக நின்றுள்ளது. பின்னர், அந்த மாணவியும் காரில் ஏறிச் சென்றுள்ளார்.

லிப்ட் கேட்ட கல்லூரி மாணவி..!! ஓரங்கட்டிய கார் ஓட்டுநர்..!! மயங்க வைத்து பலாத்காரம்..! தூக்கி வீசிய கொடூரம்..!!

கார் சிறிது தூரம் சென்றதும், காரை ஓட்டி வந்த நபர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மாணவியை காருக்குள் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பயத்தில் அந்த மாணவி மயக்கமடைந்துள்ளார். பின்னர், அந்த நபர் சாலையோர கால்வாய் அருகே மாணவியை தூக்கி வீசிச் சென்றுள்ளார். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலீசிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

கடல்மணியுடன் கள்ளத்தொடர்பு..!! மனைவியை எச்சரித்த கணவன்..!! காட்டுக்குள் கிடந்த சடலம்..!!

Tue Oct 11 , 2022
மனைவியின் தவறான உறவை கண்டித்த இரும்பு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் முத்துராமலிங்கராஜன் (45). பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு உஷா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், முத்துராமலிங்கராஜனுக்கும், உஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். உஷா தனது தாயுடன் ஏ.பி.நாடனூரில் […]
கடல்மணியுடன் கள்ளத்தொடர்பு..!! மனைவியை எச்சரித்த கணவன்..!! காட்டுக்குள் கிடந்த சடலம்..!!

You May Like