சிக்கன் சமைப்பதில் கணவன் மனைவியிடையே நடந்த தகராறை தீர்க்க வந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் பில்கிரியா காவல்நிலையத்திற்குள்பட்ட சவானி பதார் கிராமத்தில் வசித்துவந்தவர்கள் பப்பு அஹிர்வார் மற்றும் அவரது மனைவி.சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவர் செவ்வாய்க்கிழமையன்று மனைவியை சிக்கன் சமைத்து தரக் கோரி வற்புறுத்தியுள்ளார். இதில் கணவருக்கும் மனைவிக்கு தகராறு முற்றியுள்ளது. இருவரும் அடித்துக் கொண்டனர். பக்கத்து வீட்டியில் குடியிருந்த நபர் ஒருவர் இருவருக்கு இடையேயான சண்டையை தீர்த்து வைக்க வந்துள்ளார்.
ஆனால் , அந்த சண்டையின் போது பப்பு அவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினார். இதனால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் பப்புவை கொலை செய்ததாக கைது செய்துள்ளனர். சிக்கன் சமைப்பதில் வந்த தகராறில் தலையிட்ட நபர் கொல்லப்பட் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.