fbpx

சிவனின் உத்தரவால் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்மம் நிறைந்த கோயில்..!! எங்கு இருக்கு தெரியுமா..? திகிலூட்டும் தகவல்கள்..!!

நம் நாட்டில் கோவில்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கோவில்களின் எண்ணிக்கை உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு கதை இருக்கும். சில புராண கதைகளையும், சில வரலாற்று கதைகளையும் கொண்டிருக்கும். சில கோவில்கள் நம்ப முடியாத மர்மங்களைக் கொண்டு இருக்கும். அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில்.

இந்த கோயிலானது ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று கதைகள் கூறுகின்றன. அதுவும் சிவ பெருமானே இந்த கோவில் பேய்களால் கட்டப்பட வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி பேய்களால் ஒரு கோவிலை கட்ட முடியும்? எதற்காக கட்ட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அதற்கான பதிலை தற்போது பார்கலாம்.

இந்த கோயில் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரத்தில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான கோயில்களில் இது ஒன்று. இந்த கோவில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் ஃபேமஸ். காரணம், இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர்.ச்

அதுவும் ஒரே இரவில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயில், சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு அதிசயம் தான். புனித ஆலயம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் அதிகம் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, விஞ்ஞானிகளை குழப்பும் சில விஷயங்களும் இதில் உள்ளது. பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சந்து பூசி கட்டப்படும்.

ஆனால், இந்த கோவில் வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் பயன்படுத்தவில்லையாம். அது மேலும் இந்த கோவிலின் மர்மத்தை அதிகரிக்கிறது. இந்த கோயிலின் மர்மக் கதை, பலருக்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்படலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு உத்தரவிட்டாராம். அதுவும் நாளை காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கூறினாராம்.

கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த நேரத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் பலர் கூறுகிறார்கள். மன்னன் கீர்த்தியின் மனைவி காக்னாவதி சிவபெருமானின் சிறந்த பக்தை என்றும், சுற்றி ஒரு சிவன் கோயில் கூட இல்லாததால், அவள் அதைக் கட்டினாள் என்றும் பலர் நம்புகிறார்கள். ஆனால், அதிகப்படியான மக்களை ஈர்ப்பது முதல் கதை தான்.

இந்த கோவிலை விஞ்ஞானிகள் பல ஆய்வு செய்ததாகவும், அது எப்படி கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் கூறுகின்றனர். ஏதோ ஒரு சக்தி கோவிலில் உள்ளது கண்ணுக்கு தெரியாத அந்த சக்தி கோவிலை பாதுகாக்கிறது என்றும் சிலர் நம்புகின்றனர். இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் உள்ளது. 120 அடி உயரமுள்ள இந்தக் கோயிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பாதுகாப்பாக உள்ளது.

இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த கோவிலை சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் உடைந்திருந்தாலும், கக்கன்மாத் கோவில் இன்றும் பாதுகாப்பாக தான் இருக்கிறது. மேலும், இக்கோயிலின் வளாகத்தில் கல்லை யாராவது எடுத்தால் கோயிலின் மற்ற கற்களும் நடுங்கத் தொடங்குமாம். அதனால், இங்குள்ள கல்லை தொடவே பயப்படுவார்களாம்.

Chella

Next Post

’வளர்ந்து வரும் சிவலிங்கம்’..!! ’உச்சத்தை தொட்டால் உலகம் அழியும்’..!! மர்மம் நிறைந்த குகை கோயில்..!!

Tue Sep 5 , 2023
தமிழ்நாட்டில் இருக்கும் குணா குகை, பல்லவன் குகைகள் போன்றவை பண்டைய கால பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக இருக்கின்றன. அதே சமயம், இந்த இடங்கள் மக்கள் பொழுதுபோக்கக் கூடிய சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. இது போன்ற குகைகள் இந்தியா முழுவதிலும் உள்ளது. அவற்றில் மிகவும் பிரபலமானது தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பாதல் புவனேஷ்வர் குகைக் கோயில். பல்வேறு அதிசயங்கள் நிறைந்த இந்த குகையில் பண்டைய காலத்து […]

You May Like