குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ரமேஷ் சாகர் கடந்த 6 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.. அவர் கோடக் செக்யூரிட்டிஸில் தனது டிமேட் கணக்கைத் தொடங்கினார். ஒரு மாதத்திற்கு முன்பு, ரமேஷ் சாகரின் கணக்கில் ரூ.11,677 கோடி பணம் வந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.. 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரது கணக்கில் பணம் இருந்தது.
இருப்பினும், சில மணிநேரங்களில் அந்த பெரும் தொகை திரும்பப் பெறப்பட்டதால், அவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.. இதுகுறித்து பேசிய அவர் “ ஜூலை 26, 2022 அன்று, எனது கணக்கில் ரூ. 116,77,24,43,277.10 கோடியைப் பெற்றேன், அதில் நான் 2 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரூ. 5 லட்சம் லாபத்தை பெற்றேன். அன்றிரவு சுமார் 8 மணி முதல் 8.30 மணி அளவில், அந்தத் தொகையை வங்கி திரும்பப் பெற்றது,” என்று தெரிவித்தார்..
எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணம், வங்கிக்கணக்கில் பணம் தவறுதலாக செலுத்தப்பட்டது என்பது தெரிய்வந்துள்ளது.. ரமேஷ் மட்டுமின்றி வேறு சிலருக்கும் அன்றைய தினம் லட்சக்கணக்கான பணம் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் திரும்ப பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது…