fbpx

விநாயகருக்கே ஆதார் அட்டை..! அட்ரஸ் இதுதான்..! எங்கு தெரியுமா?

விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புது முயற்சியாக, விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், விநாயகரின் முகவரி கைலாசம் என்றும் அவர் பிறந்த தேதி ஆறாம் நூற்றாண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய தந்தையின் பெயர் மகாதேவ் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

விநாயகருக்கே ஆதார் அட்டை..! அட்ரஸ் இதுதான்..! எங்கு தெரியுமா?

மேலும் முகவரியில், ‘கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ், அஞ்சல் குறியீடு (PIN)- 000 001’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை தயாரித்தவர்கள், விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் எண்ணையும் உருவாக்கி இணைத்துள்ளனர். இதனை வடிவமைத்த ஷ்ரவ்குமார் கூறுகையில், ”ஒரு முறை நான் கொல்கத்தா சென்றிருந்த போது அங்கு விநாயகருக்கு பேஸ்புக் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

விநாயகருக்கே ஆதார் அட்டை..! அட்ரஸ் இதுதான்..! எங்கு தெரியுமா?

அதை பார்த்த பின்பு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தனித்துவமான விநாயகர் பந்தல் ஒன்று வடிவமைக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்காக நான் ஆதார் அடையாள அட்டை வடிவில் பந்தல் அமைக்க திட்டமிட்டேன். இதன் மூலம் ஆதார் அடையாள அட்டையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூற முடியும்” என்று கூறினார்.

Chella

Next Post

லாரி கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து; பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பள்ளி குழந்தைகள் உட்பட 10 பேர் பலி..!

Thu Sep 1 , 2022
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்துவிட்டு பள்ளிகூடத்தை விட்டு வெளியே வந்த குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே இருக்கும் பஸ் ஸ்டாப் சென்றுள்ளனர். பஸ்சுக்காக குழந்தைகள் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வேகமாக பள்ளிக் குழந்தைகள் நின்றுகொண்டிருந்த பஸ் நிறுத்தம் மீது வேகமாக மோதியது. அதன் […]

You May Like