fbpx

இனி பிரசவத்திற்கு ஆதார் அட்டை தேவையில்லை !! அமைச்சர் தகவல்…

மருத்துவமனைகளில் ஆதார் அட்டை பிரசவத்திற்கு தேவை என்ற கட்டாயம் இனி இருக்காது என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியான இவர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்ாறர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் ஆதார் அட்டைகட்டாயம் தேவை என தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட ஆவணம் இல்லாததால் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது வலி ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் பிரசவம் பார்த்துள்ளனர். இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் தாய்க்கு உதிரப்போக்கு அதிகமாகியுள்ளது. இதனால் அந்த பெண் இறந்துவிட்டார்.

இரண்டு ஆண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தது. மனைவி மற்றும் குழந்தைகளை இழந்த கணவன் உறவினர்களுடன் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினார். சிகிச்சை அளிக்காத செவிலியர்கள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சிகிச்சை அளிக்காத மருத்துவர் மற்றும் செவிலியர் உள்பட அனைவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இனி எந்த கர்ப்பிணிக்கும் ஆதார் அட்டை தேவை இல்லை. மகப்பேறு சிக்சை பெறுவதற்கு தாய் அட்டையும் தேவையில்லை. என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இனி வரும் கர்ப்பிணிகள் , குழந்தைகளை காக்கட்டும்.!

Next Post

ரயில் பெட்டிகள் திடீரென துண்டானதால் பரபரப்பு!!

Sun Nov 6 , 2022
சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் துண்டானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சேரன் விரைவுரயில் திருவள்ளுர் அருகே சென்று கொண்டிருந்த போது இரவு 11 மணி அளவில் எஸ்7 எஸ் 8 என்ற 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் கேட்டது. பயத்தில் பயணிகள் அலறிய நிலையில் ரயில் நிலையத்தின் 4-வது மேடையில் ரயில் சென்றபோது இரண்டு பெட்டிகளை […]

You May Like