முத்தம் கொடுத்த போட்டோவை வைத்து சிறுவன் 17 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த பாந்தரா பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்த சிறுமியின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் மாதம் வந்துள்ளது. அதற்கு சிறிய பார்டி ஒன்றை ஏற்பாடு செய்துளார். இந்த பார்டியில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கலந்து கொண்டுள்ளான். அப்போது, அந்த சிறுமிக்கு அந்த சிறுவன் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த சிறுவன் செல்ஃபியாகவும் எடுத்து வைத்துள்ளான். சில நாட்கள் கழித்து அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுவதாக மிரட்டி அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்நிலையில், அந்த மாணவியின் கல்லூரி வழியாக சென்ற அந்த சிறுவன் அவரை வெளியில் வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியுள்ளார் இதனை கண்ட அந்த மாணவியின் தோழி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் மகளிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியைடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.