fbpx

’அடி ஆத்தி… பாத்தாலே பயமா இருக்கே’..!! ’எம்புட்டு ஆழம்’..!! திகிலூட்டும் பாலம்..!! இனி நீங்களும் அனுபவிக்கலாம்..!!

கேரளாவின் மிக நீளமான பாலம் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் பிக்சர்ஸ்க் மலை பிரதேசத்தில் நீளமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான பாலமாக கருதப்படுகிறது. கோலாஹலமேடு பகுதியில் உள்ள இந்த கண்ணாடி பாலம் வழியாக இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். மிக தூரத்தில் உள்ள முண்டக்காகயம், குட்டிக்கல் மற்றும் கோக்காயார் ஆகிய தொலை தூர பகுதிகளை கூட இந்த கண்ணாடி பாலத்திலிருந்து ரசிக்கலாம்.

பாலத்தின் சிறப்பம்சங்கள் :

இந்த பாலம் 40 மீட்டர் நீளமுடையது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 15 பார்வையாளர்கள் இந்த பாலத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஒருவருக்கு ரூ.500 தான் கட்டணம். இந்த பாலத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே செலவிட முடியும். இந்த பாலத்தில் பெரியவர்களும், சிறியவர்களும் திரில்லிங்கான அனுபவத்தை பெற முடியும்.

இதற்கு சாகச பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு பெயர் கண்டீலீவர் கண்ணாடி பாலம். 120 அடி நீளம் கொண்டது இந்த பாலம். கண்ணாடி பாலம் கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் இருக்கிறது. பாலத்தின் மேல் 15 அல்லது 20 பேரைத்தான் அனுமதிக்கிறார்கள். மற்ற விளையாட்டு நிகழ்வுகளான ஸ்கை விங், ஸ்கை சைக்கிளிங், ஸ்கை ரோலர், ராக்கர் எஜெக்டர், ஃப்ரீ பால், ஜியாண்ட் ஸ்விங் மற்றும் ஜிப் லைன் ஆகிய விளையாட்டுகளும் உள்ளன.

கண்ணாடி மேல் நடப்பதும் கண்ணாடியின் முனைக்கு சென்று 3500 அடி ஆழ பள்ளத்தை பார்ப்பதும் திகிலூட்டும் வகையில் இருக்கிறது. பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கு வந்தால் நிச்சயம் மறக்க முடியாத திகில் அனுபவத்தை பெறலாம். 35 டன் ஸ்டீல், ஜெர்மனி கண்ணாடி கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சாகச பாலங்களை பார்வையிட இனி துபாய் அல்லது சீனாவுக்கு போக தேவையில்லை. கேரளாவுக்கு போங்க..!

Chella

Next Post

வெற்றியை ருசிக்கப் போவது யார்..? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

Fri Sep 8 , 2023
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இதனால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி மேற்குறிப்பிட்ட 6 […]

You May Like