உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவம்குமார். இவர், கன்னோஜ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கணவரை விட்டு பிரிந்து வசித்து வரும் 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே, சிவம் குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால், சிவம் குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்ததால், சிவம்குமாருடன் உல்லாசமாக இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவம் குமார், அந்த பெண்ணிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். இதனால், அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்தவகையில், கடந்த வியாழன்கிழமையும் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சிவம் குமார், அங்கிருந்த ஸ்க்ரூடிரைவரால் அந்த பெண்ணின் கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிவம் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.