fbpx

தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த குற்றவாளிகள்; நாட்டிற்கு எதிராக போர் தொடுக்க திட்டம்…!

கேரளாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும் குற்றவாளிகள் மூன்று பேருக்குமான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

’ஓபிஎஸ் மீதிருந்த சிறிய அளவிலான மரியாதை கூட தற்போது இல்லை’..! - கோகுல இந்திரா

Wed Jul 13 , 2022
’கோவிலாக நினைக்கக் கூடிய அதிமுக கட்சி அலுவலகத்தை கடப்பாறை கொண்டு உடைத்து அராஜகம் செய்தவர் ஓபிஎஸ்’ என்று கோகுல இந்திரா கடுமையாக பேசியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுக்குழுவுக்கான தீர்ப்புக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீர்ப்பு […]

You May Like