fbpx

அபாய நிலைக்கு மாறிய டெல்லி..!! இதற்கெல்லாம் அதிரடி தடை விதிப்பு..!! பரபரப்பு உத்தரவு

டெல்லியில் முக்கிய கட்டுமானப் பணிகள் தவிர, மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாகவே தலைநகர் டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 407 என்ற அளவில் பதிவாகி மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், டெல்லியில் வாகனங்களை இயக்குவதற்கும், மக்கள் சுவாசிப்பதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு காற்றின் தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் எடுத்து வருகிறது.

அபாய நிலைக்கு மாறிய டெல்லி..!! இதற்கெல்லாம் அதிரடி தடை விதிப்பு..!! பரபரப்பு உத்தரவு

அந்த வகையில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தவிர மற்ற கட்டுமானப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மெட்ரோ ரயில் சேவை பணிகள், விமான நிலையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள்; ரயில் சேவைகள் மற்றும் நிலையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சார்ந்த கட்டுமான பணிகள், மருத்துவமனை கட்டுமான பணிகள் உள்ளிட்ட சில முக்கிய பணிகளுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’சின்ன வயசுல இருந்தே நாங்க அப்படித்தான்’..!! ஒரே மணமகனை மணந்த இரட்டை சகோதரிகள்..!!

Mon Dec 5 , 2022
இரட்டை சகோதரிகள் ஒரே வாலிபரை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இந்த சகோதரிகள், தகவல் தொழில் நுட்பத்துறையில் பொறியியல் படிப்பு படித்துவிட்டு ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் தந்தை இறந்து […]
’சின்ன வயசுல இருந்தே நாங்க அப்படித்தான்’..!! ஒரே மணமகனை மணந்த இரட்டை சகோதரிகள்..!!

You May Like