fbpx

ஒரே குடும்பமாக வாழும் 72 பேர் தினமும் இவங்க எப்படி சமைக்குறாங்க தெரியுமா?

தாத்தா, கொல்லு தாத்தா, பாட்டி, கொல்லுபாட்டி என மொத்த சொந்தங்களுடன் ஒரே குடும்பமாக 72 பேரும் ஒன்றாக சமைத்து வாழும் குடும்பத்தினர் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவது பிற மாநில மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாகவே இப்படி கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வருவதாக நெகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். இதை வெளிநாடுகளில் வியப்பாக பார்ப்பார்கள். அதே நேரத்தில் இந்த கலாச்சாரம் சிறிது சிறிதாக மாறி வருவது வருத்தத்திற்குரிய விஷயம்.

ஆனால், இன்றளவும் தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் என 72 பேர் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது இப்போது இந்திய மக்களுக்கே அதிசயமாக உள்ளது. என்ன சண்டை வந்தாலும் இவர்கள் ஒன்றாகத்தான் இருப்பார்கள். காலம் மாற மாற தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு செல்வதுபோல் இவர்கள் எந்த மாற்றமும் இன்றி இருக்கின்றார்கள்.

மகாராஷ்டிராவில் 4 தலைமுறையாகவே இவர்கள் கூட்டுக்குடும்பமாக உள்ளனர். இவர்கள் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது. இவர்கள் அனைவருக்கும் அஷ்வின் தோய் ஜோடோ என்பவர்தான் மூத்தவர். காலை மாலை என இரு வேலைக்கும் தலா பத்து லிட்டர் என நாளொன்றுக்கு 20 லிட்டர் பால் தினமும் செலவாகின்றது. ஒரு நாளைக்கு இவர்கள் 15 கிலோ காய்கறி வாங்குகின்றார்கள். உணவுக்காக ஒரு நாளைக்கு Rs1000 முதல் Rs 1200 வரை செலவிடுகின்றார்கள்.

இதை தவிர இவர்களுக்கு அசைவ உணவு சமைக்க வேண்டும் என்றால் இதுவே 4 மடங்கு கூடுதலாகும். இது குறித்து அவர் கூறுகையில், ’’ நாங்கள் ஒரு வருடத்திற்கான சாமான்களை முன் கூட்டியே வாங்கி சேமித்து வைத்துவிடுவோம். அரிசி, கோதுமை, பருப்பு என 40 முதல் 50 மூட்டை வாங்குவோம். இதே குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் வேறு இடத்தில் இருந்து வருபவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். எங்களுக்குள் என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் பேசி தீர்த்துப்போம். தனிமையை உணர்ந்ததில்லை. விளையாடுவதற்கு அக்கம்பக்கத்திற்கு செல்ல வேண்டியதும் இல்லை.’’ என்று மகிழ்ச்சியாக அவர் கூறுகின்றார்.

Next Post

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டத்திற்கு புறம்பானது கிடையாது…

Thu Nov 17 , 2022
குழந்தைகளை விவாகரத்திற்கு பின்னர் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்மந்தப்பட்ட குடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆஜராகி மனு குறித்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் குழந்தையை மனுதாரரின் […]

You May Like