பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட தகவல் அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள அழைப்பாளரின் வீட்டிற்கு ஜெயின் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி காலை நொய்டாவில் உள்ள தனது புதிய வீட்டில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு வந்த அமித்ஜெயின், விரைவில் தனது குடும்பத்துடன் தனது புதிய வீட்டிற்கு மாற உள்ளதாக தெரிவித்திருந்தார். காஜியாபாத்தில் உள்ள தனது அண்ணன் கரனை அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு தனியாக சென்றதை டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் வேறு சில பொருட்களை எடுக்க CWG கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்த ஜெயின் மகனும் அவர்களது ஓட்டுநரும் ஜெயின் தூக்கில் தொங்கிய நிலையில், இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.