fbpx

இந்தியாவில் பணவீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது….!

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 10.7%ஆக இருந்தது. இது, 2022 ஆகஸ்ட் மாதத்தில்12.41%ஆக இருந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இந்த இலக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது.

உணவு குறியீட்டின் அடிப்படையில் பணவீக்க விகிதம் ஆகஸ்ட், 2022 9.93% லிருந்து செப்டம்பர், 2022-ல் 8.08%ஆக குறைந்தது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.

Vignesh

Next Post

ரூ.15,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sat Oct 15 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என மொத்தம் ஐந்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 ஆண்டுகள் தேவை. தேர்வு […]

You May Like