சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை அதிகரித்து அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருப்பதைப் போல விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக மாற்றலாமா? என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அந்த கருத்து நாளடைவில் மெல்ல, மெல்ல மறைய தொடங்கி விட்டது.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உயர்தர விபச்சாரம் செய்ததாக 18 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஹைதராபாத் காவல் துறை ஆணையர் ஸ்டீபன் ரவிந்தர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தெலுங்கானாவின் பேகம் பேட்டை பகுதியை சேர்ந்த முகமது சல்மான் கான் (எ) சமீர் என்ற நபர் வசித்து வருகிறார்.
முதலில் இவர் ஒரு விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வந்த போது விபச்சார கும்பலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விடுதியில் தங்குவதை கவனித்திருக்கிறார் இந்த நிலையில் சுயலாபத்தை பார்ப்பதற்காக இதை ஒரு வழியாக தேர்ந்தெடுத்த அவர் போதை பொருள் விற்பனை செய்யும் ஆர்னோ என்பவரிடம் தொடர்பு கொண்டு இருந்தார் என்று கூறி இருக்கிறார் காவல்துறை ஆணையர் ஸ்டீபன்.
இதன் பிறகு இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து சென்ற 2016 ஆம் வருடம் சோமாஜி கூடா என்ற பகுதியை மையமாக வைத்து விபச்சார விடுதி நடத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக மொத்தம் 17 பேர் முக்கிய அமைப்பாளர்களாக வெவ்வேறு மாநிலங்களில் இதனை நடத்தி வந்துள்ளனர் இதில் ஒவ்வொரு வாட்ஸ் அப் குழுவிலும் சுமார் 300 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இவர்களின் மூலம் 14,190 இளம் பெண்களுடன் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த நிலையில் நாடு முழுவதும் இருக்கின்ற இவர்களுடைய உயர்தர விபச்சார தொழில் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து அப்பாவி பெண்களை புகைப்படம் எடுத்து அவற்றை வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக அனுப்பி வைக்கின்றனர்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்வு செய்து கால் சென்டர்களுக்கு தகவல் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து கால் சென்டர் ஊழியர்கள் ஒரு தொகையை இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்வார்களாம்.
இந்த பணத்தில் 30 சதவீதம் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் 35% கால் சென்டர் பிரதிநிதிகளுக்கும் மீதம் இருக்கின்ற 35% பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்கிறார்கள் அதோடு விபச்சாரத்திற்கு பெண்கள் கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக பல்வேறு பகுதிகளில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்திருக்கின்றன. வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயார் செய்து இவர்களை இந்தியா முழுவதும் இருக்கின்ற நகரங்களுக்கு அழைத்துச் செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார்.