fbpx

திகில் செய்தி..!! இறந்தவர்கள் லிஸ்ட்டில் இருந்த அந்த பெயர்..!! ஏர்போர்ட்டில் சூட்கேசை தேடி அலையும் ஆவி..!!

லண்டன் விமான நிலையம் ஒன்றில், தனது சூட்கேசைத் தேடி அலையும் ஆவி குறித்த திகில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தீப்பற்றி எரிந்த விமானம்

1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் பனிமூட்டம் நிறைந்த ஒரு நாளில், லண்டன் விமான நிலையம் என அழைக்கப்பட்ட, இன்றைய ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் 19 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். தரையிறங்க இருக்கும் விமானத்தில் பிரச்சனை என விமானி தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் தங்கள் வாகனங்களுடனும், மருத்துவ உதவிக்குழுவினர் ஆம்புலன்ஸ்களுடனும் விமான நிலையத்தில் காத்திருக்க, விழுந்து நொறுங்கி தீப்பற்றிய விமானத்தில் இருந்தவர்களைக் காப்பாற்ற கடுமையான பனி பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது.

திகில் செய்தி..!! இறந்தவர்கள் லிஸ்ட்டில் இருந்த அந்த பெயர்..!! ஏர்போர்ட்டில் சூட்கேசை தேடி அலையும் ஆவி..!!

அந்த நேரத்தில் தனது சூட்கேசைத் தேடி அலையும் பயணி ஒருவரைக் கண்டுள்ளார்கள் மீட்புக் குழுவினர். எனது சூட்கேசை பார்த்தீர்களா? என அவர் அவர்களிடம் கேட்டுள்ளார். பிறகுதான் தெரிந்துள்ளது, ஏற்கனவே உயிரிழந்தவர்களின் பட்டியலில் அந்த பயணியின் பெயரும் இருந்தது என்பது. அந்த நாள் முதல் பலர் அந்த விமான ஓடுபாதையில் இந்த பயணியைப் பார்த்துள்ளார்களாம். சொல்லப்போனால், 1970இல் ஒருமுறை விமானம் ஒன்றின் ரேடாரில் யாரோ ஓடுபாதையில் நடமாடிக்கொண்டிருப்பது தெரியவரவே, போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவலளிக்கப்பட, அவர்கள் ஓடுபாதைக்கு விரைய, அங்கே யாரையும் காணவில்லையாம். ஆக, ஆவிகள் நடமாட்டம் குறித்து ஆராய்வோர், இன்றும் அந்த விமான நிலையத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக நம்புகிறார்கள். 

Chella

Next Post

’பாபா’ படத்தின் ரீ ரிலீசால் ஜெயிலர் படத்திற்கு சிக்கல்..!! ’ரஜினி யோசிக்காம இந்த வேலைய பண்ணிட்டாரே’..!!

Fri Dec 2 , 2022
20 வருடத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிபெறாத பாபா திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்வதால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி […]
ரஜினி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியீடு..!! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்..!!

You May Like