fbpx

கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் : மனித வள மேலாளர் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை …

கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு பனத்தூர் – வர்தூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் உபசனா . 34 வயதான இவர்தனியார் நிறுவனத்தில் மனித வள துறை மேலாளராக பணி புரிந்து வந்தார். ’ கை நிறைய சம்பாதிக்கும் இவருக்கு என்ன கவலை இருக்க போகின்றது என பலர் நினைக்கலாம். ’ ஆனால் மனதில் உள்ள அனைத்தையும் பிறருக்கு தெரியாதே .. கை நிறைய சம்பளம் வந்தாலும் கணவன் மீது இருந்த காதலால் எப்போதும் மன அழுத்தத்திலேய இருந்து வந்துள்ளார்.

இவரது கணவன் நிஹர் ரஞ்சன் மென்பொறியாளராக உள்ளார் இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தை இல்லை என கூறப்படுகின்றது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில காலம் இருவரும் பிரிந்தே இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் கணவனைப் பற்றிய எண்ணங்கள் எப்போதும் அவரை மன அழுத்தத்தில் இருக்கச் செய்திருக்கின்றது. இந்நிலையில் அவர் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு மேலும் மன உளைச்சலுக்குள்ளான உபசனா 10வது மாடியில் இருந்து குதித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரை விட்டார். தகவல் அறிந்து வந்த போலீஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது. அவரது அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. எனது கணவன் என்னை மனதளவில் பாதிக்கும் வகையில் என்னை டார்ச்சர் செய்கின்றார். நான் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றேன். அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் ’’ என எழுதியிருந்தது.

கடிதத்தில் குறிப்பிட்டுள்ள புகாரை அடிப்படையாக வைத்து நிஹர்மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.பி.சி. 306ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் லிஸ்ட்ரஸ் !!

Thu Oct 20 , 2022
பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் .. பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு நிதி பட்ஜெட்டை […]

You May Like