காசியாபாத்தில் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்வதை கண்ட மனைவி, கணவனை புரட்டி எடுத்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனைவி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கர்வா சவுத் பண்டிகையின்போது காசியாபாத்திற்கு தனது தாயுடன் ஷாப்பிங் செய்ய வந்த மனைவி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கணவரை புரட்டி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனைவி மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் அந்த நபரை அடிக்கிறார்கள். அங்கிருந்த பெரிய கூட்டம் வழக்கம்போல வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. கடைக்கு முன் சண்டையிடுவதை பார்த்து, கடைக்காரர் பாஹர், பாஹர், (அவுட், அவுட்) என கூச்சலிடுகிறார். மேலும், அடி வாங்கும் நபரை அவரது காதலி தடுக்க முயன்றபோது அவரும் பலமாக தாக்கப்படுகிறார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கணவன் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்வா சௌத் என்பது நாட்டின் வடக்கு மற்றும் மேற்கில் முதன்மையாக கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். திருமணமான பெண்கள் இந்த நாளில் விரதமிருந்து தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வார்கள். கர்வா சௌத் கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாளில், அல்லது இருண்ட பதினைந்து நாட்களில், இந்து மாதமான கார்த்திகையில் அனுசரிக்கப்படுகிறது.