சுதந்திரமாக விசாரணை நடத்த முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு
கர்நாடகாவில் பாலியல் புகார்கள் தொடர்பாக காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு விசாரணை நடத்தலாம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
மங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , ’’ கர்நாடக மாநிலத்தில் பாலியல் புகார்கள் அதிகமாக வருகின்றது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரிக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. லிங்காயத் சிவமூர்த்தி மற்றும் முருக சரணு ஆகியோர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்தும் காவல்துறையினர் முழு விசாரணை நடத்த வேண்டும். ’’ என்றார். இதே புகாரில் குற்றவாளிகளை கைது செய்ய தாமதம் ஏற்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் மற்றும் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில் , ’’ இது போன்ற பேச்சுக்களுக்கு பதில்அளிக்கும் அவசியம் இல்லை, சட்டப்படி அனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் இந்த விஷயத்தில் தற்போதைக்கு எதையும் கூறமுடியாது ’’ என்றார்.
சித்ரதுர்கா மாவட்டத்தில் , லிங்காயத் சமூகம் சார்பாக இயங்கி வரும் மடத்தினர் மூத்த தலைவர் முருக மாத் சிவமூர்த்தி முருக சரணு ஆகியோர் உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டனர். இந்நிலையில் புகார் அளித்து 6 நாட்களுக்கு பின்பே நேற்று இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
விஷயம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது
கடந்த ஆகஸ்ட் மாதம் மைசூருவில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விசாரணை குழு தலைவர் சி.சந்திரசேகர் என்பவர்தான் இது குறித்து முதன் முதலில் புகார் தெரிவித்துந்தர். பள்ளியில் மற்றும் விடுதிக் காப்பாாளர் உதவியுடன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பாதுகாவலர் உள்பட 3 பேர் மீது நசர்பாத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை பின்னர் சித்ரதுர்கா ஊரக காவல்நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலத்தை மாவட்ட காவல்துறையினர் பதிவு செய்துகொண்டனர். இதையடுத்து 164 பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னதாகவே செவ்வாய்க் கிழமை குற்றவாளிகள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.