fbpx

பிரசாதம் வைக்கவில்லை எனில் மெலிந்து காணப்படும் கிருஷ்ணர் சிலை.. இந்த அதிசய கோயில் பற்றி தெரியுமா..?

இந்த உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன.. அந்த வகையில் பல அற்புதங்கள் மற்றும் மர்மங்கள் காரணமாக பல கோயில்கள் புகழ்பெற்றவையாக உள்ளன. இதனால் இந்த கோவில்களுக்கு மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் திருவாரப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலை பற்றி இன்று பார்க்க போகிறோம்.. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

வனவாசத்தின் போது, ​​பாண்டவர்கள் பகவான் கிருஷ்ணரின் சிலையை வணங்கியதாகவும், சிலைக்கு பிரசாதமும் படைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பாண்டவர்கள் தங்கள் வனவாசம் முடிவடைந்த பிறகு சிலையை திருவாரப்பில் விட்டுச் சென்றனர், பின்னர் அங்கிருந்த மீனவர்கள் பகவான் கிருஷ்ணரை ‘ கிராம தெய்வமாக’ வழிபடத் தொடங்கினர். ஆனால் திடீரென ​​ஒரு ஜோதிடர் வந்து அவர்களிடம், நீங்கள் அனைத்து வழிபாடுகளையும் சரியாகச் செய்ய முடியாது என்று கூறி, அந்த கிருஷ்ணர் சிலையை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டாராம்..

கேரளாவைச் சேர்ந்த வில்வமங்கலம் சாமியார் ஒரு முறை படகில் பயணம் செய்தபோது அவரது படகு பாதி வழியில் நின்றுவிட்டது.. பல முயற்சிகள் செய்த போதிலும், படகை நகர்த்த முடியவில்லை.. அப்போது அந்த சாமியார், நீரின் உள்ளே ஒரு சிலை இருப்பதை அவர் கண்டார். அவர் சிலையை தண்ணீரிலிருந்து எடுத்து தனது படகில் வைத்தார். ஆச்சர்யமாக படகும் நகர்ந்தது.. பின்னர் அவர் ஒரு மரத்தடியில் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தி சிலையை அங்கே வைத்தார். பின்னர் அவர் சிலையை அங்கிருந்து எடுக்க முயன்றார் ஆனால் அந்த சிலையை எடுக்க முடியவில்லை.. இதன் பிறகு, சிலை அங்கு நிறுவப்பட்டது. கம்சனை கொன்ற பிறகு கிருஷ்ணர் சிலையாக மாறியதாகவும், அதனால் ​​அவர் மிகவும் பசியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக, அந்த சிலைக்கு எப்போது பிரசாதம் படைக்கப்பட்டது..

அந்த தெய்வம் பசியை பொறுத்துக்கொள்ளாது. எனவே ஒரு நாளைக்கு 10 முறை இறைவனுக்கு பிரசாதம் படைக்கப்படுகிறது. அந்த பிரசாதத்தை சிலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சிலை மெலிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.. ஆனால் கிருஷ்ணர் பசியுடன் இருக்கும் போது, தட்டில் இருந்து பிரசாதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. பகவான் கிருஷ்ணரே இந்த பிரசாதத்தை சாப்பிடுகிறார் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்..

ஒருமுறை கிரகண நேரத்தில் இந்த கோவில் மூடப்பட்ட போது நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆம்.. அந்த கிரகணத்தின் முடிவில், கிருஷ்ணரின் சிலை மிகவும் மெலிந்து காணப்பட்டதாம்.. ஆதி சங்கராச்சாரியாருக்கு இது தெரிந்தவுடன், அவரே இந்த நிலையை பார்த்து புரிந்து கொள்ள அங்கு சென்றார். இதற்குப் பிறகு, கிரகண காலத்திலும் கோயில் திறக்கப்பட வேண்டும் என்றும், இறைவனுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆதிசங்கராச்சாரியாரின் உத்தரவின்படி, இந்த கோவில் 24 மணி நேரத்தில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படும். கோவில் 11.58 நிமிடங்களில் மூடப்பட்டு, சரியாக 12 மணிக்கு 2 நிமிடங்களுக்குப் பிறகு திறக்கப்படும். கோவிலின் பூசாரிக்கு பூட்டுக்கான சாவியோடு கோடாரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பூட்டை திறக்க தாமதமானால், பூட்டை கோடரியால் உடைக்க வேண்டும் என்றும், கடவுளுக்கு பிரசாதம் வழங்குவதில் தாமதம் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஹோட்டலில் ஆர்டர் செய்து பூரியில் புழு இருந்ததால் பெண் அதிர்ச்சி...! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...!

Fri Aug 19 , 2022
சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், தான் ஆர்டர் செய்த உணவில் புழுக்கள் இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறியதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகத் தடை விதித்தனர். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ராணி என்ற பெண், திங்கள்கிழமை தனது மகனுடன் நேற்று முன்தினம் மாலை சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் தனியார் சைவ உணவகத்தில் சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். […]

You May Like