கேரளாவில் மகன்கள் மற்றும் மருமகள்களின் முழு சம்மதத்துடன் 78 வயது நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
கேரள மாநிலம் திருவெல்லா பகுதியைச் சேர்ந்தவர் சோமன் நாயர். 78 வயதான இவர், விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனது 65 வயது நண்பருக்கு பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயர் பீனா குமாரியைச் சந்தித்துள்ளார். பீனா குமாரிக்கு ஒரே ஒரு மகள். அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தனது கணவனை இழந்த பீனா குமாரி, மகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தார்.

சோமன் நாயரின் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். பீனா குமாரியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பீனா குமாரியின் சகோதரர் ப்ரவீன், சகோதரியின் மறுமணத்திற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நண்பருக்காக பீனா குமாரியை பெண் பார்க்கச் சென்ற சோமன் நாயருக்கும் பீனா குமாரிக்கும் காதல் மலர்ந்து, இருவரும் ஒருவருக்கொருவர் பேசி முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில், இவரது திருமணம் கடந்த 24.11.2022 அன்று நடைபெற்றது. திருமணத்தை சோமன் நாயரின் மூத்த மகள், மருமகன் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தினர்.