புதுவை பல்கலைக்கழகம் 21.09.2022 மற்றும் 27.09.2023 அன்று காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இதில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் (இயற்பியல்) முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் (நெட் ஒர்க்கிங்/கணினி) உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக அனுமதி அட்டை, நேரம், தேர்வு மையம், வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களுக்கு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்வு ஓஎம்ஆர் முறையிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உட்பட்டே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.