60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள வீடுகளில் 11.59 கோடி (59%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.