காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் செயல்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்வலையை கொடுத்தது. அதன் பிறகு ராகுல் காந்தியை குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், இதுகுறித்து மல்லிகார்ஜுனா கார்கே கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஆதரவை பெரும் தகுதி இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள ஒருவர் ராகுல்காந்தி மட்டும்தான். அவருக்கு மாறாக யார் இருக்க முடியும், வேறு யாராலும் முடியாது. எனவே, ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.