fbpx

‘ஜம்மு-காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்’..!! உள்துறை அமைச்சகம் திடீர் அறிவிப்பு..!! பதற்றம்..!!

இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொறு ஆண்டும் அமெரிக்காவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஆயுத மோதல் இருப்பதால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையின் 10 கிலோ மீட்டர் அருகே செல்ல வேண்டாம். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்.

ஜம்மு-காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்..!! உள்துறை அமைச்சகம் திடீர் அறிவிப்பு..!! பதற்றம்..!!

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, பாலியல் குற்றங்கள் போன்ற மோசமான வன்முறைகள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் இது மாதிரியான அறிவுரைகள் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிக்க…! இடி, மின்னலுடன் 15 மாவட்டங்களில் கனமழை..! அடடே இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டமும் இருக்குபோல’..!

Chella

Next Post

அக்னிபாத் திட்டத்தில் மகளிர் .. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகின்றது..

Sat Oct 8 , 2022
இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இன்று சண்டிகரில் இதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில் , நமது முன்னோர்களின் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பெருமை மிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் […]

You May Like