fbpx

தின்பண்டம் வாங்கியதால் திட்டிய பெற்றோர்..? உயிரை மாய்த்துக் கொண்ட 10 வயது சிறுமி..!

10 வயது சிறுமி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் பாபு – ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் ரித்திகா. 10 வயதான இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி லாஸ்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்த போது பெற்றோரிடம் கேட்காமல் வீட்டில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு தின்பண்டம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அவரது பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.

தின்பண்டம் வாங்கியதால் திட்டிய பெற்றோர்..? உயிரை மாய்த்துக் கொண்ட 10 வயது சிறுமி..!

இதனால், மனமுடைந்த மாணவி ரித்திகா தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் துணியால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ரேகா லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்தவர்களிடம் மகளிருக்கான பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது: ராகுல் காந்தி அதிரடி..!

Thu Sep 15 , 2022
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தலித் சமூகத்தின் சகோதரிகள் இரண்டு பேரின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ஆறாவது நபராக கைது செய்யப்பட்ட சோட்டு என்பவர், […]

You May Like