fbpx

இளைஞருக்கு பயந்து விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ்1 மாணவி..!! நடந்தது என்ன..?

ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்றிரவு விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிராகர்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கஜூரிபாடாவை பகுதியைச் சேர்ந்த ஷாசாப் சாஹா என்ற இளைஞர் தனது புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிரப்போவதாகவும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், நான் கல்லூரிக்கு செல்லும் போது, தன்மேல் ஆசிட் அடிப்பதாகவும் அந்த இளைஞர் தன்னை மிரட்டியதாக மாணவி புகாரில் உள்ளதாக கூறப்படுகிறது.

இளைஞருக்கு பயந்து விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ்1 மாணவி..!! நடந்தது என்ன..?

இந்நிலையில், மாணவி தற்கொலை செய்த செய்தியை அறிந்த இளைஞர், வெளியூருக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாசாப் என்ற இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில், அந்த இளைஞரின் தந்தை முர்தாசா சாஹா (55), தாய் பேகம் பீபி (45), சகோதரர் அர்ஷாத், சகோதரிகள் அப்சானா, அஸ்மா பேகம் மற்றும் உறவினர் ரிஹானா பீபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுமியின் தவறான புகைப்படங்கள் அந்த இளைஞரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

விருந்துக்கு வந்த இடத்தில் புதுமணத் தம்பதிகளுக்கு நடந்த துயரம் !!

Sun Oct 16 , 2022
விருந்துக்கு சென்றபோது அப்படியோ ஆற்றில் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து சென்ற புதுமணத்தம்பதியினர் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பொம்மை கவுணடன் பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30 ) . இவரது மனைவி காவியா (20) ஒருமாதத்திற்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் போடியில்  அவர்களின் ஊரியில் இருந்து சற்று தொலைவில்உள்ள ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு […]

You May Like