மத்தியபிரதேசத்தில் மஹாகாளீஸ்வர் கோயில்மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்பட்டுள்ளது..
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கட்டப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கா என்றழைக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும்.
இக்கோயில் சுமார் 836 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. மஹாகல் லோக் காரிடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இன்று முதல் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பூஜை செய்த பின்னர் கார்த்திக் மேளா மைதானத்தில் உரை நிகழ்த்தினார்.
இக்கோயிலின் மிகப்பெரிய வழி அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய சிவ லிங்கம் இதில் வைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். 900 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயில் தளத்தில் திரிசூலம் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் முத்திரை திரிசூல வடிவத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ளது.
சிவ புராண கதைகளை கூறும் வகையில் வடிவங்கள் கோயில் வளாகத்தைச் சுற்றி மதில் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிசா, குஜராத் , ராஜஸ்தான் கோயில்கள் பாணியில் கலைநயமிக்க தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் மக்களின் மனதை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
108 தூண்கள் அதைக்கப்பட்டு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது இந்த மஹாகாளீஸ்வர் கோயில் .