fbpx

Gpay QR Code-ஆல் வந்த சிக்கல்..! ரூ.550-க்கு பதில் ரூ.55,000 செலுத்திய நபர்..!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஷெல் பெட்ரோல் பங்கில் அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது, QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக பில் பதிவாகியிருக்கிறது. வாடிக்கையாளரும் அதைச் சரியாக கவனிக்காமல் பணம் செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து 55,000 டெபிட் ஆனதாக மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

Gpay QR Code-ஆல் வந்த சிக்கல்..! ரூ.550-க்கு பதில் ரூ.55,000 செலுத்திய நபர்..!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். பின்னர், பணத்தை திரும்பச் செலுத்துமாறு கேட்டிருக்கிறார். உரிமையாளரும் தன்னுடைய வங்கிக் கணக்கை சரிபார்த்துவிட்டு அந்தப் பணத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு திரும்பச் செலுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chella

Next Post

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி..!! ’இனி கேன்களில் விற்பனை செய்ய தடை’..!!

Sun Sep 25 , 2022
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை […]
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி..!! ’இனி கேன்களில் விற்பனை செய்ய தடை’..!!

You May Like