fbpx

ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய, அனுமதிக்கோரிய வழக்கு ஜூலை 21ஆம் தேதி விசாரணை…!

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக, மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட சிவலிங்கத்தை இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம், கீழ் நீதிமன்றம் உத்தரவுப்படி நடத்திய வீடியோ ஆய்வின் போது, ஞானவாபி மசூதியின் வசூகானாவில் (தொட்டியில்) சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தரப்பு வாதத்தில் கூறியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கை முஸ்லிம் தரப்பு வாதத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் சிரவண மாதத்தில் சிவலிங்க பூஜை செய்ய, அரசியலமைப்பு உரிமையை மேற்கோள் காட்டி மனுவில் அனுமதி வழங்க கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முன்பே வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், வாரணாசியில் உள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதை பல்வேறு பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, ஒரு வழிபாட்டாளராக, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தால், சட்டப்படியும் விண்ணப்பதாரரின் வழிபாட்டு உரிமைகள் படி, அங்கு போய் வழிபட உரிமை உண்டு என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஞானவாபி மசூதிக்குள் காணப்படும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனு இதுவாகும். மறுபுறம், மசூதி தரப்பு குழு அதன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல, அது ஒரு நீரூற்று என்று தெரிவித்து வருகின்றனர். மேலும், உண்மைத் தன்மையை கண்டறிய, கார்பன் டேட்டிங், தரையில் ஊடுருவும் ரேடார் தொழில்நுட்பம் அல்லது அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்தி சிவலிங்க கட்டமைப்பின் கீழ் கட்டுமானத்தின் தன்மையை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட இந்த மனு, ஜூலை 21-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

அதிர்ச்சி..!! நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை..! போலீசார் வழக்குப்பதிவு..!

Mon Jul 18 , 2022
நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி கண்காணிப்பாளர் சோதனை நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் எழுதும் நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை நாடு முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் எழுதினர். சோதனைகளுக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு […]

You May Like