fbpx

பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்..!!

இந்தியாவின் ’வாரன் பஃபெட்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு பங்குச்சந்தை முதலீடுகளில் பிரம்மாண்டம் காட்டிய தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (வயது 62) மும்பையில் இன்று காலமானார்.

இந்திய பங்குச் சந்தை உலகில் அதிகம் பரிட்சயமான பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர், பங்குச் சந்தைகளில் சுமார் 40 முன்னணி நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வங்கி வைத்துள்ளார். ஒரே நாளில் அவருக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம், அல்லது பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் என  ஜூன்ஜூன் வாலா பெயர் அடிக்கடி செய்திகளில் வருவதுண்டு. 1985ஆம் ஆண்டு முதல் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வரும் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா இந்தியாவின் வாரன் பஃபெட் மற்றும் மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ள தலால் தெருவின் பெரிய காளை என்று வர்ணிக்கப்பட்டவர்.

பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்..!!

ராகேஷ் ஜூன் ஜூன் வாலாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஜெட் ஏர்வேசின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே, இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ் உடன் இணைந்து ”ஆகாசா” என்கிற புதிய விமான நிறுவனத்தை தொடங்கினார் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா. 62 வயதான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் ப்ரீச்கேண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்..!!

ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் ராகேஷ் ஜூன்ஜூன் வாலா அதிக அக்கறை கொண்டிருந்ததாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பொருளாதார உலகிற்கு ராகேஷ் ஜூன்ஜூன் வாலா ஆற்றிய பங்களிப்பு என்றும் மறுக்க முடியாதது என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை; தூக்கத்தை கெடுத்ததால் நடந்த கொடூரம்..!

Sun Aug 14 , 2022
அரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் ஒருவர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி அருகில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாட சென்றுள்ளார். அவர் தனது ஒன்றரை வயது மகனை வீட்டில் தூங்க வைத்து விட்டு சென்றுள்ளார். பாதி தூக்கத்தில் எழுந்த குழந்தை அம்மாவை காணாமல் அழுதுள்ளது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் தந்தை குழந்தையின் அழுகை சத்தத்தால்  தூக்கம் கலைந்து […]

You May Like