10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககும் ரோஜ்கர் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 75,000 பேருக்கு முதல்கட்டமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது அனைவருக்கும் வேலை வழங்கும் திட்டத்தின் முதல் படிக்கட்டு எனவும் , குடிமக்களின் நலனையும் , இளைஞர்களின் நலனையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
’’பிரதமரின் வழிகாட்டுதலின்படி , அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் தீவிரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் 38 அமைச்சகங்கள் , துறைகளில் புதிய பணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
’’பணியாளர்கள் குழு ஏ (இதழியல் ) , குரூப் பி ( இதழியல்லாதுறை ) குரூப் சி .. மத்திய ஆயுதப்படை துறை உள்பட காலியிடங்கள் உருவாக்கப்படுகின்றது., துணை ஆயுவாளர், காவலர் எல்.டி.சி , ஸ்டெனோ, வருவாய்த்துறை ஆய்வாளர், எம்.டி.எஸ். போன்ற துறைகளில் வேலைகள் உருவாக்கப்படும் என்றார்.,
யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, மற்றும் ரயில்வே வேலை வாய்ப்பு வாரியம் போன்ற வேலை வாய்ப்பு முகமைகள் மூலமாக ஊழியர்கள் தேர்வு நடத்தப்படும் . அல்லது அமைச்சகங்களின் மூலமாக நடத்தப்படும்.
’’