பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரு- மைசூரு இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சல நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை அறிவித்துள்ளதால்மீண்டும் அதே பிரச்சனை தொடர்வது கவலைகொள்ளச்செய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. பகலில் வெள்ளம் வடியுமா என நினைத்தபோது மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மைசூரு-பெங்களூரு இடையே தற்போதைக்கு பயணத்தை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
மைசூரு மளவள்ளி சாலையிலும் பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு – நாகமங்கலா – பாண்டவபுரா – ஸ்ரீரங்கபட்டாண பாதையை தேர்ந்தெடுக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் பொதுவாகவே மைசூரு – பெங்களூரு , மளவள்ளி மைசூருஇடைய போக்குவரத்து நெரிசல் இருக்கும் மழை அதிக அளவில் பெய்து வருவதால் இன்னும் அதிகமான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றது. பெங்களூருவில் நேற்று பெய்த மழை 45.5 மி.மீ. என்ற அளவில் பதிவாகி உள்ளது