fbpx

எஸ்.பி.ஐ. வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்வு…

எஸ்.பி.ஐ. வங்கி வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளது.. சிறுக சிறுக சேமித்து வைப்பு நிதியில் லாபம் பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி வைப்புகளை லாபகரமாக மாற்ற ஒரு வாரத்தில் , இரண்டு முறை வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. ஐ.டி.பி.ஐ. , எஸ் வங்கி , ஆக்சிஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற பல வங்கிகள் வைப்பு நிதி விகிதங்களை மாற்றி உயர்த்தி வழங்கியுள்ளன.
அக்டோபர் 15 முதல் எஸ்.பி.ஐ. வங்கி தனது நிலையான வைப்பு விகிதங்களை முதன் முதலில் உயர்த்திய நிலையில் , அது மீண்டும் அக்டோபர் 21ல் விதிதத்தை உயர்த்தி அறிவித்தது. புதிய விகிதங்கள் அக்டோபர் 22 முதல் நடைமுறைக்கு வந்தன. அக்டோபர் 15 உயர்வு நிலையான வைப்பு விகிதங்களில் 0.20 சதவீதம் வரை சிறிதளவு உயர்வைக் கொண்டு வந்த நிலையில் எஸ்.பி.ஐ. வங்கி 0.8 சதவீதம் வரை உயர்த்தி இருக்கின்றது.
211 நாட்களுக்கு மேல் ஆனால் ஒரு வருடத்திற்கம் குறைவான காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு குறைவான நிலையான வைப்புக்களுக்கு அக்டோபர் 22 முதல் 5.50 சதவீதம் வட்டி கிடைக்கும். இது முந்தைய 4.70 சதவீதத்திலிருந்து மற்ற முதிர்வுகளுக்கு , விகித உயர்வின் அளவு 025 சதவீதம் முதல் 0.6 சதவீதம் வரை இருந்தது. இருப்பினும் , வங்கி 7.45 நாட்கள் வைப்பு விகிதங்கள் மாற்றாமல் 3 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளது.
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 4.5 சதவீத வட்டியும் , 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை உள்ளவைகளுக்கு 5.25 சதவீத வட்டியும் கிடைக்கும். ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 6.1 சதவீதம் வட்டி கிடைக்கும். இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட நிலையான வைப்புகளுக்கு 6.1 சதவீதம் வட்டி கிடைக்குமூ.இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்வு காலமட் கொண்ட நிலையான வைப்புகளுக்கு 6.25 சதவீத வட்டியும் மூன்று முதல் 10 ஆண்டுக்கு 6.1 சதவீத வட்டி கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் 0.5 சதவீதம் கூடுதல் வட்டி பெறுவார்கள். 15 ஆகஸ்ட் 22ல் 6.1 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்கும் 1000 நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணைக்காலத்தையும் எஸ்.பி.ஐ.. இந்த சலுகை அக்டோபர் 31 வரை செல்லுபடியாகும். எஸ்.பி.ஐ அதன் ஊழியர்கள்மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவீத கூடுதல் வட்டி பெறுபவர் அல்லது ஓய்வு பெறுபவர் அல்லது ஓய்வூதிய பெற்ற அதிகாரி இரட்டை நன்மையைப் பெறுவார்கள்.

Next Post

மத்திய அரசு கட்டுப்பாட்டில் ’கல்வி ’ தொலைக்காட்சி ....

Sat Oct 22 , 2022
மாநில அரசின் சார்பில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மத்திய அரசின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு சார்பில் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சிக்கு தடை விதித்துள்ளது. மாநில அரசு சார்பில் இனி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பப்படாது. இனி கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் கீழ் பிரசார்பாரதி வாயிலாக இயங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு […]

You May Like