புதுடெல்லி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (Kendriya Vidyalaya) ஒன்றில் 11 வயது மாணவியை பள்ளியின் கழிவறையில் இரண்டு சீனியர் மாணவர்கள், பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் காவல்துறையில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சி. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் உரிமை ஆணையம் Delhi Commission for Women (DCW) காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும்தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கே வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் நடந்த சம்பவத்திற்கு இப்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அவர், மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். டெல்லி மகளிர் உரிமை ஆணையம் கடந்த செவ்வாய் கிழமை போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி முதல்வரிடம் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழக்கின் விவரம்…
டெல்லி மகளிர் உரிமை ஆணையம் அளித்த புகாரின்படி, 11ஆம் வகுப்பு மாணவிக்கும், பிளஸ்2 மாணவர்கள் இருவருக்கும் இடையே சின்ன தகராறு ஏற்பட்டுள்ளது. வகுப்பறையை கடக்கும்போது, ஏற்பட்ட இந்த தகராறில் மாணவியிடம் இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், இரண்டு மாணவர்களும் எரிச்சல் அடைந்து மாணவியிடம் வம்பு செய்துள்ளனர். பிறகு, மாணவியை இருவரும் அருகில் இருந்த கழிவறைக்குள் இழுத்துச் சென்று உள்ளே தாழ்பாழ் போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஆசிரியரிடம் கூறியதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க… பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பலாத்காரம்..!! மாணவியிடம் மனதை கொடுத்த நர்சரி ஓனர்..! கர்ப்பத்தால் ஆடிப்போன பெற்றோர்..!