தன் கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து, தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் செயலி வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்நிலையில், தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியை இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த இளைஞரின் வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தன் கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ளார். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், கொலை வழக்குப்பதிவு செய்து இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.